முந்தைய முன்னுரையில் தானியங்கி தொழில்நுட்பம் என்னவென்பதை சுருங்கக்கண்டோம். இன்றைய தொழிற்சாலைகளில் இயந்திரங்களை தன்னிச்சையாக (Automatic) செயல்படவைக்க உதவும் இரண்டு மிக முக்கியமான கட்டுப்பாட்டு கணினிகள்(Controllers) Programmable Logic Controller மற்றும் Distributed Control System. இவை இரண்டும் தொழிற்சாலைகளின் கடின சூழலுக்கேற்ப உருவாக்கப்பெற்ற Embedded System-த்தின் ஒரு மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பாகும்.
குறிப்பு: PLC மற்றும் DCS இவை இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டுக் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், தொழிற்சாலைகளின் அளவிற்கேற்ப இவைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்கு PLC-களும் மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு DCS-களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்த வலைப்பதிவில், PLC-யை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி தொழில்நுட்பத்தைப்பற்றி பார்க்கப் போகின்றோம்.
ஒரு PLC-யின் செயலை ஒரு மனிதனின் செயலுடன் எளிதாக ஒப்பிடமுடியும். மனிதனும் இயற்கையால் படைக்கப்பெற்ற ஒரு தானியங்கி இயந்திரம் எனலாம்.

மனிதனின் கண் (ம) செவி அவனைச்சுற்றி நிகழும் அனைத்து செய்திகளையும் மூளைக்கு அளிக்கின்றது. மூளையானது பெற்ற செய்திக்கேற்ப கட்டளைகளை கை (ம) கால்களுக்கு இடுகின்றது. கை கால்களும் தான் பெற்ற கட்டளைகளுக்கேற்ப செயல்களை செய்கின்றது.
இதில் செவி மற்றும் கண்களை உள்ளீட்டுக்கருவி (Input Devices) எனலாம். ஏனென்றால் இது மனிதனுக்கு வெளியே நிகழும் தகவல்களை அவனுக்குள்ளே உள்ளிடுகின்றது (அ) செலுத்துகின்றது.
மூளை தனுக்கு கிடைத்த (உள்ளீடு செய்யப்பெற்ற) தகவல்களை ஆராய்ந்து அவற்றிற்கு ஏதுவான செயல்களைச்செய்ய கணக்கிட்டு (CPU) உரிய கட்டளைகளை கை கால்களுக்கு அளிக்கின்றன.
மூளையிடமிருந்து பெற்ற கட்டளைகளை கை கால்கள் வெளிக்கொணர்ந்து (Output Devices) செயல்படுத்துகின்றன.
PLC-யின் கட்டைமைப்பு:

Input Devices (அ) உள்ளீட்டுக் கருவி – ஒரு குறிப்பிட்ட அமைப்பில் (System) நிகழும் செயல்களை உணர்ந்து அதனை மின்சார தகவல்களாக PLC அமைப்பிற்கு அளிக்கும் கருவியினை Input Devices (அ) உள்ளீட்டுக் கருவி என அழைக்கின்றோம். எ.கா – Push Button, Switches, RTD, Thermocouple, Pressure sensors, etc.,
Input Module – Input Devices (அ) உள்ளீட்டுக் கருவியில் இருந்து பெறப்படும் மின்சார தகவல்களை CPU-விற்கு ஏற்றார் போல் Digital Signal-களாக மாற்றம் செய்யும் பணியினை Input Module மேற்கொள்கின்றன.
CPU (Central Processing Unit) – Input Module-லிடமிருந்து பெறப்பெற்ற தகவல்களைக்கொண்டு தன்னுள் முன்னரே எழுதப்பெற்ற program-மிற்கேற்ப, வெளி அமைப்பிற்கு(System) தேவையான கட்டளைகளை CPU-வானது தீர்மானித்து Output module-களுக்கு வழங்குகின்றது.
Output Module – CPU-வால் கணிக்கப்பட்ட கட்டளைகளை(Command-Digital Signal) வெளிக்கொணர்ந்து அவற்றை Output Devices (அ) வெளியீட்டுக் கருவிகளுக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யும் பணியினை Output Module செய்கின்றது.
Output Devices (அ) வெளியீட்டுக் கருவி – Output Module-லிடமிருந்து பெறப்பெற்ற செயல்களை அதாவது மாற்றம் பெற்ற CPU-வின் கட்டளைகளை அமைப்பின் மீது நடைமுறைப்படுத்தும் பணியை Output Devices (அ) வெளியீட்டுக் கருவி மேற்கொள்கின்றது. எ.கா – Valves, Motors, Pumps, Lamps, etc .,
ஒரு தொட்டியின் எளிய கட்டுப்பாட்டு அமைப்பு:

மேலே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டிலிருந்து உள்ளீட்டுக்கருவிகள் (அ) Input Devices மற்றும் வெளியீட்டுக்கருவிகள் (அ) Output devices பின்வருமாறு,
- Low Level Sensor (LSL) மற்றும் High Level Sensor (LSH) இவை இரண்டும் தொட்டியின் அளவை அளந்து அவற்றினை PLC-க்கு உள்ளீடு செய்ய பயன்படும் கருவிகளாகும். எனவே, இவை உள்ளீட்டுக்கருவிகள் (அ) Input Devices என்று அழைக்கப்படுகின்றது.
- Solenoid Valve மற்றும் Pump இவை இரண்டும் PLC-ன் Program-மிற்கேற்ப CPU-விடமிருந்து கட்டளைகளைப் பெற்று தொட்டியின் அளவை கட்டுப்படுத்தும் காரணிகளாகும். எனவே, இவை வெளியீட்டுக்கருவிகள் (அ) Output Devices என்று அழைக்கப்படுகின்றது.
[—அடுத்தது—]

Leave a Reply