அயராது வளர்ச்சியடையும் மனிதனின் மூளைக்கேற்ப இயந்திரங்களும் அதன் தொழில்நுட்பங்களும் மனிதனுடன் இணைந்தே வளர்ச்சியடைகின்றன.
தனி மனிதனின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என தொடங்கி சமூகத்தேவைகளான மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, கேளிக்கை வரை அனைத்திலும் இன்று அறிவியல் புகுந்து அவைஅவைகளின் தேவைகளை பூர்த்திசெய்ய முனைகின்றது. அப்படி பூர்த்தி செய்ய முனையும் அறிவியலின் பல்வேறு பரிணாமங்களில் ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றதுதான் தானியங்கி தொழில்நுட்பம் (Automation Technology).
தானியங்கி தொழில்நுட்பம் என்பது ஒரு இயந்திரத்தின் திறனை, தனுக்குத் தானே முடிவெடுக்கும் அளவிற்கு மேம்படுத்த உதவும் ஒரு அறிவியல் பிரிவாகும். இவ்வாறாக உருவாக்கப்படும் இயந்திரத்தினை தானியங்கி இயந்திரம் (Automatic Machine) என்று அழைக்கலாம்.
ஒரு வீட்டின் மின் தூக்கியில் துவங்கி செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் ஒரு செயற்கைக்கோள்வரை எதிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை காணமுடியும்.
தொழிற்சாலைகளில் தானியங்கி தொழில்நுட்பத்தின் பங்கு:
தொழிற்சாலைகளில் தானியங்கி தொழில்நுட்பத்தை நிறுவுவதன் மூலமாக கீழ்க்கண்ட பயன்களை பெறமுடியும்,
- ஒரே தரத்திலான உற்பத்தியை பெருக்குவது,
- மனிதன் செல்லமுடியா இடங்களில் பணிகளை மேற்கொள்வது,
- மனிதப்பிழைகளால் (அ) இயந்திரத்தின் செயலிழப்பால் ஏற்படும் தவறுகளை தடுப்பது,
- ஆபத்தான சமயங்களில் எச்சரிக்கைச் செய்வது,
- மனிதனின் பணிச்சுமைகளை குறைப்பது.
தானியங்கி தொழில்நுட்பத்தை தொழிற்சாலைகளில் நிறுவ Programmable Logic Controllers, Distributed Control System மற்றும் Embedded Control System என பல்வேறு தொழில்நுட்பங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான அடித்தளத்தை கொண்டிருந்தாலும், ஒன்றிற்கொன்று வேறுபாடுவுடையது. இவற்றுள் நாம் Programmable Logic Controllers-ஐ பற்றி இனிவரும் கட்டுரைகளில் காண்போம்.

Leave a Reply